/உள்ளூர் செய்திகள்/மதுரை/2 வழக்குகளில் துணைமேயர் மன்னன் கோர்ட்டுகளில் சரண்2 வழக்குகளில் துணைமேயர் மன்னன் கோர்ட்டுகளில் சரண்
2 வழக்குகளில் துணைமேயர் மன்னன் கோர்ட்டுகளில் சரண்
2 வழக்குகளில் துணைமேயர் மன்னன் கோர்ட்டுகளில் சரண்
2 வழக்குகளில் துணைமேயர் மன்னன் கோர்ட்டுகளில் சரண்
ADDED : செப் 27, 2011 10:51 PM
மதுரை : அரசு வழக்கறிஞர் வீட்டில் சோடாபாட்டில் வீச்சு, மாநகராட்சி 52வது
வார்டு இடைத்தேர்தல் மோதல் ஆகிய வழக்குகளில் துணைமேயர் மன்னன், மதுரை
மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் சரணடைந்தார். மதுரை அரசு வழக்கறிஞர்
தமிழ்ச்செல்வனின் வீடு பி.பி.சாவடியில் உள்ளது. இவரது வீட்டில் ஒரு
கும்பல், சோடாபாட்டில் வீசியது. தமிழ்ச்செல்வன் மனைவி பவுன் புகாரில்,
கரிமேடு போலீசார் வழக்கு பதிவு சய்தனர். இவ்வழக்கில் தி.மு.க.,
பகுதிச்செயலர் ஜெயராமன் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.துணைமேயர் மன்னன்
இவ்வழக்கில் கைதாவதை தவிர்க்க, மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமின் மனு
தாக்கல் செய்தார். சம்பந்தப்பட்ட கோர்ட்டில்
சரணடைந்து, ஜாமின் பெற கோர்ட் உத்தரவிட்டது.இதே போல, மதுரை மாநகராட்சி
52வது வார்டு இடைத்தேர்தலில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, அ.தி.மு.க., வட்ட
செயலர் பெரியசாமி புகாரின் பேரில், மன்னன் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது. இவ்வழக்கிலும் மன்னன் முன்ஜாமின் பெற்றார்.இவ்விரு
வழக்குகளிலும் மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் சரணடைந்தார்.
மாஜிஸ்திரேட்கள் கதிரவன், ஜான்சுந்தர்லால் சுரேஷ் முன் ஜாமின் வழங்கி,
விசாரணையை அக்., 13க்கு தள்ளிவைத்தனர்.


