ADDED : அக் 09, 2011 12:29 AM
புதுச்சேரி : முத்தூட் பின்கார்ப் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம், வெண்ணிலா நகர் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
முகாமை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். முத்தூட் கிளை மேலாளர் கதிரவன், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு கொறடா நேரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பெண்கள் சம்பந்தமான பிரச்னைகள், எலும்பு முறிவு, கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து இலவச மருந்து வழங்கினர். ஏற்பாடுகளை முத்தூட் மகில மித்ரா குழுவினர் செய்திருந்தனர்.


