ஒபாமா - தலாய்லாமா சந்திப்பு : சீன அரசு கடும் அதிருப்தி
ஒபாமா - தலாய்லாமா சந்திப்பு : சீன அரசு கடும் அதிருப்தி
ஒபாமா - தலாய்லாமா சந்திப்பு : சீன அரசு கடும் அதிருப்தி

பீஜிங் : அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா இருவரும் நேரில் சந்திப்பதற்கு, சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பீஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க அரசுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் தலாய் லாமா இடையிலான சந்திப்பு, வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இல்லாமல், பிரத்யேக அறை ஒன்றில் நேற்று நடந்தது. கடந்த ஆண்டில், இதேபோல் ஒபாமாவும், தலாய் லாமாவும் நேரில் சந்தித்து, திபெத் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, தைவானுக்கு ஆயுத சப்ளை செய்யப் போவதாக, அமெரிக்கா அறிவித்தது. இதனால், அதிருப்தி அடைந்த சீன அரசு, அமெரிக்காவுடனான ராணுவத் தொடர்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டது. சமீபத்தில் தான் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளும் பல்வேறு சந்திப்புகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


