/உள்ளூர் செய்திகள்/சேலம்/அனுமதியின்றி நடந்த "ஷூட்டிங்' ரத்து: நகராட்சி அதிகாரிகள் அதிரடிஅனுமதியின்றி நடந்த "ஷூட்டிங்' ரத்து: நகராட்சி அதிகாரிகள் அதிரடி
அனுமதியின்றி நடந்த "ஷூட்டிங்' ரத்து: நகராட்சி அதிகாரிகள் அதிரடி
அனுமதியின்றி நடந்த "ஷூட்டிங்' ரத்து: நகராட்சி அதிகாரிகள் அதிரடி
அனுமதியின்றி நடந்த "ஷூட்டிங்' ரத்து: நகராட்சி அதிகாரிகள் அதிரடி
ADDED : செப் 10, 2011 03:06 AM
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், அனுமதியின்றி நடந்த சினிமா
படப்பிடிப்பை, நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதனால், சினிமா
குழுவினர் பாதியில் திரும்பினர்.
ஆத்தூர் நகராட்சிக்கு சொந்தமான பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று
'கொள்ளைக்காரன்' என்ற சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில், 'மைனா'
நடிகர் வித்தார்த், நடிகை சஞ்சிதாஷெட்டியும் நடித்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஆத்தூர் துலுக்கனூர், நரசிங்கபுரம்,
தம்மம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டில்
படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்துவதாக, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு)
ராமகிருஷ்ணனுக்கு புகார் சென்றது. அதன்பேரில், ஆத்தூர் நகராட்சி
அலுவலர்கள், படப்பிடிப்பு குழுவினரிடம் அனுமதி விபரம் குறித்து கேட்டனர்.
அப்போது, அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தது. அதனால்,
படப்பிடிப்பை நிறுத்தும்படி, நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால்,
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.


