/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தடையின்றி குடிநீர் சப்ளை கூறுகிறார் ஆபிரகாம்தடையின்றி குடிநீர் சப்ளை கூறுகிறார் ஆபிரகாம்
தடையின்றி குடிநீர் சப்ளை கூறுகிறார் ஆபிரகாம்
தடையின்றி குடிநீர் சப்ளை கூறுகிறார் ஆபிரகாம்
தடையின்றி குடிநீர் சப்ளை கூறுகிறார் ஆபிரகாம்
ADDED : செப் 28, 2011 11:50 PM
சாயல்குடி : ''தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என கடலாடி ஒன்றியம் 20வது வார்டில்(டி.கரிசல்குளம்) தி.மு.க., சார்பில் போட்டியிடும் மு.ஆபிரகாம் கூறினார்.
இவர், கடலாடி ஒன்றியம் உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய் பின்னர் கூறியதாவது: டி.கரிசல்குளம், செஞ்சடைநாதபுரம், அன்னபூவன் நாயக்கன்பட்டி, வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம் வழியாக கூடுதல் பஸ் இயக்க முயற்சிப்பேன். தடையில்லா மின்சாரம் கிடைக்க குரல் கொடுப்பேன். தடையில்லா குடிநீர் கிடைக்க பாடுபடுவேன்.
முதியோர், திருமண உதவித்தொகை உள்ளிட்ட அரசு உதவிகள் பெற வழி செய்வேன். உடனடி மருத்துவ வசதிகள் பெற முயற்சிப்பேன். அனைத்து கிராம மக்களுக்கும் பாகுபாடின்றி எந்த நேரத்திலும், எங்கும் சென்று உதவி செய்ய காத்திருக்கிறேன், என்றார். கே.ராமசாமி, ஆர். கே. கருணாநிதி, எம். ராமசாமி, சி. முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


