/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாளர் -முதலியார் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனுவேளாளர் -முதலியார் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
வேளாளர் -முதலியார் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
வேளாளர் -முதலியார் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
வேளாளர் -முதலியார் பேரவை முதல்வரிடம் கோரிக்கை மனு
ADDED : செப் 07, 2011 12:23 AM
புதுச்சேரி : காரைக்கால் சோழிய வேளாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டுமென புதுச்சேரி அனைத்து வேளாளர் -முதலியார்கள் முன்னேற்ற பேரவை தலைவர் பொன்னுரங்கம் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு நிரந்தர படிகட்டுகள் அமைத்து அழகு படுத்த வேண்டும் என்ற எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் செங்குந்தர் மற்றும் துளுவ வேளாளர்களை மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதேபோல் காரைக்கால் சோழிய வேளாளர்களையும் சேர்த்து எம்.பி.சி.,பிரிவில் இடஒதுக்கீடு வரும் கல்வியாண்டிற்குள் அறிவிக்க வேண்டுமென மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.


