/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மயிலாடுதுறை பாசஞ்சர் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கைமயிலாடுதுறை பாசஞ்சர் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை பாசஞ்சர் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை பாசஞ்சர் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை
மயிலாடுதுறை பாசஞ்சர் பயணிகள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை
ADDED : செப் 07, 2011 10:16 PM
விழுப்புரம்:மயிலாடுதுறை பாசஞ்சர் ரயிலை விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு
காலை 9 மணிக்கு வரும் வகையில் மாற்ற வேண்டுமென பயணிகள் கோரிக்கை
விடுத்தனர்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம் நேற்று
விழுப்புரம் வந்தார். அவரை மயிலாடு துறை பாசஞ்சர் ரயிலில் செல்லும் பயணிகள்
சந்தித்தனர். மயிலாடுதுறை பாசஞ்சர் தினமும் மாலை 6.20 மணிக்கு
விழுப்புரத்தில் புறப்பட்டது. தற்போது 5.45 மணிக்கு மாற்றியுள்ளனர்.
நாங்கள் ரயிலை பிடிக்க முடியவில்லை. நேரத்தை மாற்ற வேண்டும். கடலூர்
முதுநகர் ரயில் நிலையத்தில் மயிலாடுறை - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் காலை
வேளையில் 12 நிமிடங்களுக்கு மேல் நிற்கிறது.
இதனால் விழுப்புரத்திற்கு காலை
9.20 மணிக்கு தான் வந்து சேருகிறது. முதுநகரில் அதிக நேரம் நிற்பதை
தவிர்த்தால் விழுப்புரத்திற்கு காலை 9.05 மணிக்கு வந்து சேரும்.
திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கடலூரில் நிறுத்த வேண்டும் என்றும்
கோரிக்கை விடுத்தனர்.கோட்ட மேலாளர் வைத்தியலிங்கம் பதிலளிக்கையில்,
மயிலாடுதுறை பாசஞ்சர் நேரத்தை மாற்றியது ஒரு தரப்பினருக்கு வசதியாக இல்லை.
மாலை நேரத்தை மாற்றுவது குறித்து சர்வே எடுத்து தான் செய்ய முடியும். இந்த
ரயிலை காலையில் 9.05 மணிக்கு விழுப்புரம் வரும் வகையில் மாற்ற நடவடிக்கை
எடுக்கிறோம் என்றார்.


