தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?
தேவாரத்தில் குண்டு வெடிப்பு பெண் உட்பட 2 பேர் உடல் சிதறி பலி : வெடித்தது ராக்கெட் லாஞ்சர்?

தேவாரம் : தேவாரத்தில் குண்டு வெடித்ததில், பெண் உட்பட இரண்டு பேர் உடல் சிதறி இறந்தனர்.
நடந்தது என்ன? இப்பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் கூறுகையில்,' மதியம் 2.20 மணிக்கு பலத்த சத்தம் கேட்டது. வீடுகள் குலுங்கின. காஸ் சிலிண்டர் அல்லது மின் டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கும் என்று நினைத்தோம். ஆனால், கொடூரமான முறையில் இருவரும் இறந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தோம். குணசேகரனின் உடல் பாகங்கள் அருகிலுள்ள மரக்கிளையிலும், வீட்டின் கூரையிலும் தொங்கின. தரையில் ஒரு அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது' என்றார்.
ராக்கெட் லாஞ்சர்? சம்பவ இடத்தைப் பார்வையிட்ட ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ் கூறுகையில்,'விசாரணைக்கு பின், வெடித்தது எந்த வகை குண்டு என்பது தெரிய வரும்' என்றார். அதே சமயம், வெடித்த குண்டின் வீரியத்தை பார்க்கும் போது, டெட்டனேட்டர் செருகிய ஜெலட்டின் பண்டல் அல்லது ராக்கெட் லாஞ்சராக இருக்க வேண்டும் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கியூ பிரிவு: பவுன்தாய் உடலிலிருந்து வெடிகுண்டின் துகள்களை, தடயவியல் நிபுணர் ஜெயபிரகாஷ் சேகரித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில், கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
லாஞ்சர்?
நக்சல்?


