Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் மணீஷ் திவாரிக்கு ஹசாரே வழக்கறிஞர் நோட்டீஸ்

காங்கிரஸ் மணீஷ் திவாரிக்கு ஹசாரே வழக்கறிஞர் நோட்டீஸ்

காங்கிரஸ் மணீஷ் திவாரிக்கு ஹசாரே வழக்கறிஞர் நோட்டீஸ்

காங்கிரஸ் மணீஷ் திவாரிக்கு ஹசாரே வழக்கறிஞர் நோட்டீஸ்

ADDED : செப் 08, 2011 11:47 PM


Google News
புனே: 'தன்னை விமர்சித்து பேசியதற்கு, எழுத்துப் பூர்வமாக, மன்னிப்பு கேட்க வேண்டும்' என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரிக்கு, அன்னா ஹாசரேயின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அண்மையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவே ஒரு ஊழல்வாதி. அவரின் உள்ளங்கால் முதல், உச்சந் தலைவரை ஊழல்தான். அவர் ஊழல்வாதி என்பதை சாவந்த் கமிஷன் கூறியுள்ளது. அப்படியிருக்கையில், அவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக போராடுகிறார்?' என்றார்.

இந்நிலையில், 'தன்னை விமர்சித்துப் பேசிய மணீஷ் திவாரி, எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று தன் வழக்கறிஞர் மூலமாக, பதிவு தபால் மற்றும் இ-மெயில் வழியாக, அன்னா ஹசாரே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், 'தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதற்கு, மணீஷ் திவாரியும், அவர் சார்ந்த கட்சியும் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும். எதிர்காலத்தில், இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என, உறுதியளிக்க வேண்டும். தவறினால், இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 499 மற்றும் 500ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us