/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறைதற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை
தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை
தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை
தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஆக 11, 2011 12:55 AM
திண்டுக்கல் : மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக, கணவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
அம்பாத்துரையை சேர்ந்தவர் சரவணகுமார் (27). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (25) க்கும் 2000 ல், திருமணம் நடந்தது. ஏழு பவுன் நகை கொடுத்தனர். மேலும் 25 ஆயிரம் ரூபாய் கேட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் மனம் வெறுத்த ராஜேஸ்வரி, 2002 ஆகஸ்ட்டில், ரயிலில் விழுந்து பலியானார். தற்கொலைக்கு தூண்டியதாக, சரவணக்குமார் மீது அம்பாத்துரை போலீசார் வழக்குபதிந்தனர்.
திண்டுக்கல் சப் கோர்ட்டில் விசாரணை நடந்தது. சரவணக்குமாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டணை விதித்து, நீதிபதி வெங்கிடசாமி உத்தரவிட்டார்.


