315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி
315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி
315 வேட்பாளர்களின்மனுக்கள் தள்ளுபடி
ADDED : அக் 02, 2011 12:44 AM
சென்னை:சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்களில், 315 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு, கடந்த 22ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
கடந்த 29ம் தேதி வரை, 3,450 பேர் மனு தாக்கல் செய்தனர். கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனுக்களை பெறுவதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 35 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, கடந்த 30ம் தேதி நடந்தது. இரவு வரை பரிசீலனை நடந்ததால், ஏற்கப்பட்ட மனுக்களின் விவரங்கள் நேற்று காலை வெளியிடப்பட்டன. 200 வார்டுகளுக்கு பெறப்பட்ட 3,450 மனுக்களில், 315 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3,135 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை நாளை வாபஸ் பெறலாம். அதன் பின், இறுதி வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பது தெரியும்.


