ADDED : செப் 06, 2011 10:27 PM
கடலூர் : கடலூரில் இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடந்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இசைப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் உதவித்தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊர்வலம் நடந்தது. இதில் கடலூர் மாவட்ட இசைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலத்திற்கு இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒருங்கிணைப்பாளர் சம்பந்தமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் இசைக் கருவிகளை இசைத்தபடி நன்றி தெரிவித்துச் சென்றனர். ஊர்வலம் வன்னியர்பாளையம் நான்கு முனைசந்திப்பிலிருந்து புறப்பட்டு, புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள இசைப் பள்ளியை அடைந்தது.


