Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஊராட்சிகளில் வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு

ஊராட்சிகளில் வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு

ஊராட்சிகளில் வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு

ஊராட்சிகளில் வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு

ADDED : ஜூலை 26, 2011 12:52 AM


Google News

திருப்பரங்குன்றம் : நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சிகளில், வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்யும் புதியமுறை அமல் படுத்தப்பட உள்ளது.

இதற்காக திருப்பரங்குன்றம் ஊராட்சிகளில் வார்டுகள் பிரிக்கும் பணி நிறைவடைந்தது. கடந்த தேர்தல்வரை கிராம ஊராட்சிகளில் ஒரு வார்டில் ஒன்று முதல் மூன்று உறுப்பினர்களுக்கு மக்கள் ஓட்டளித்து தேர்வு செய்தனர். சில ஊராட்சிகளில் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஒரு வார்டில் இருந்து மூன்று கவுன்சிலர்களை தேர்வு செய்ய, ஒவ்வொரு வாக்காளரும் ஆறு ஓட்டுக்கள் அளித்தனர். ஒரு உறுப்பினர் வார்டுகளில் மக்கள் நான்கு ஓட்டுக்கள் பதிவு செய்தனர்.



புதிய முறை: வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு செய்யும் புதிய முறையை அமுல் படுத்த, தமிழகம் முழுவதும் பணிகள் நடக்கிறது. திருப்பரங்குன்றம் யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டு பிரிக்கும் பணி நடக்கிறது. இப்புதிய முறையின்மூலம் ஊராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இம்முறையின்மூலம் ஊராட்சிகளில், ஆறு ஓட்டுகள் முறை தவிர்க்கப்பட்டு, மக்கள் நான்கு ஓட்டுக்கள் மட்டுமே அளிக்க உள்ளனர். ஏற்கனவே 43 ஊராட்சிகளில் 345 வார்டுகள் இருந்தன. தற்போது, ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், 38 ஊராட்சிகளில் 324 வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us