Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செட்டித்தாங்கல் சந்தையில் மாடுகள் விற்பனை "ஜோர்'

செட்டித்தாங்கல் சந்தையில் மாடுகள் விற்பனை "ஜோர்'

செட்டித்தாங்கல் சந்தையில் மாடுகள் விற்பனை "ஜோர்'

செட்டித்தாங்கல் சந்தையில் மாடுகள் விற்பனை "ஜோர்'

ADDED : செப் 06, 2011 10:32 PM


Google News

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் வார சந்தையில் மாடுகளின் விலை உச்சத்தை தொட்டது.

திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல் வார சந்தை உழவு மாடுகள் விற்பனைக்கு பெயர் போனது. தற்போது சம்பா நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோடை மழையும் பரவலாக பெய்ததால் உழவு பணிக்கு மாடு வாங்கும் வேலையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று சந்தைக்கு ஏராளமான மாடுகள் விற்பனைக்கு வந்தது. மாடுகளின் விலை எப்போதும் இல்லாத அளவில் உயர்ந்ததுதான் விவசாயிகளை கவலையடையச் செய்தது.



இதற்கு காரணம் தென்பெண்ணை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் 50 ரூபாய் பர்மிட்டில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொண்டு வந்து குவிக்கப்பட்டு, லாரிகளில் திருட்டுத்தனமாக ஏற்றப் படுகிறது. இதனால் மாட்டு வண்டிக்காரர்களுக்கு தடையற்ற வேலை கிடைக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை மாட்டு வண்டிக்காரர்கள் சம்பாதிக்கின்றனர். இதுவே வண்டி மாடுகளின் விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறுகின்றனர் விவசாயிகள். எது எப்படியோ, நேற்று பிசியாக இருந்த செட்டித்தாங்கல் சந்தையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்ததன் மூலம் பல லட்சம் ரூபாய் அளவிற்கு பண பரிமாற்றம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us