/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேட்பு மனு தாக்கலை விஞ்சியது விருப்ப மனு கடலூரில் குவிந்த அ.தி.மு.க., பிரமுகர்கள்வேட்பு மனு தாக்கலை விஞ்சியது விருப்ப மனு கடலூரில் குவிந்த அ.தி.மு.க., பிரமுகர்கள்
வேட்பு மனு தாக்கலை விஞ்சியது விருப்ப மனு கடலூரில் குவிந்த அ.தி.மு.க., பிரமுகர்கள்
வேட்பு மனு தாக்கலை விஞ்சியது விருப்ப மனு கடலூரில் குவிந்த அ.தி.மு.க., பிரமுகர்கள்
வேட்பு மனு தாக்கலை விஞ்சியது விருப்ப மனு கடலூரில் குவிந்த அ.தி.மு.க., பிரமுகர்கள்
ADDED : செப் 08, 2011 11:45 PM
கடலூர் : கடலூர் மாவட்ட (கி) அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பதற்காக நேற்று கடலூர் டவுன் ஹாலில் குவிந்தனர்.
உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு போட்டியிடுபவர்களின் விருப்ப மனுக்களை அ.தி.மு.க., தலைமை பெற்று வருகிறது. நேற்று கடைசி நாள் என்பதால் கடலூர் டவுன் ஹாலில் விருப்ப மனுக்களை கொடுக்க கூட்டம் அலைமோதியது. வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி தொடர்வதாலும் தி.மு.க., கூட்டணியில் காங்., - வி.சி., - பா.ம.க., தனித்து போட்டியிடுவதாலும், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற கணிப்பில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகளின் மனைவிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதைப் போல், விருப்ப மனு கொடுக்கும் போதும் சிலர் வாகனங்கள் புடை சூழ தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து மனுவை தாக்கல் செய்தனர். இதுவரை கடலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு நகர செயலர் குமார், தொகுதி செயலர் சுப்ரமணியன், சேவல் குமார், மதியழகன், பாலகிருஷ்ணன், கல்யாணசுந்தரம், சிவக்குமார், முத்துகுமரன், சுந்தரம் ஆகிய ஒன்பது பேரும், கவுன்சிலர் பதவிக்கு ஏராளமா னோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கூட்டம் அதிக ளவில் வந்து கொண்டி ருப்பதால் மாநிலம் முழுவதும் விருப்ப மனு அளிக்கும் தேதியை வரும் 11ம் தேதி வரை நீட்டித்து தலைமை கழகம் அறிவித் துள்ளது. இதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் மனுக்கள் பெறப்படும் என தெரிகிறது.


