/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஏலம் விட்ட இரும்புகள் மாயம்: மூடி மறைத்த அதிகாரிகள்ஏலம் விட்ட இரும்புகள் மாயம்: மூடி மறைத்த அதிகாரிகள்
ஏலம் விட்ட இரும்புகள் மாயம்: மூடி மறைத்த அதிகாரிகள்
ஏலம் விட்ட இரும்புகள் மாயம்: மூடி மறைத்த அதிகாரிகள்
ஏலம் விட்ட இரும்புகள் மாயம்: மூடி மறைத்த அதிகாரிகள்
ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் ஏலம் விடப்பட்ட இரும்புகள் திடீரென மாயமாயின.
மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, தற்காலிக அலுவலகம் திறக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது கைப்பற்றப்பட்ட இரும்பு, மரம், பிளாஸ்டிக் பொருட்கள் தனித்தனியே ஏலம் விட்டன. மரப்பொருட்களை ஏலம் எடுத்த சரவணன், லோடுவேனில் மரங்களை நேற்று ஏற்றினார். அதிகாரிகள் ஒத்துழைப்புடன், ஏலத்தில் வராத இரும்புகளை டி.என்.28 ஏ.2869 என்ற லோடு வேனில் ஏற்றி, புதூர் மீனாட்சிநகர் குடோனுக்கு கொண்டு சென்றார். இத்தகவல் இரும்பு ஏலம் எடுத்த இளங்கோவனுக்கு தெரியவர, அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசாரை, திரும்பிச் செல்லும்படி முக்கியநபர் ஒருவரிடம் இருந்து உத்தரவு சென்றது. இதனால், இதுகுறித்து விசாரிக்காமல் போலீசார் திரும்பினர். தகவல் வெளியானதால், அதிகாரிகளே மீண்டும் குடோனுக்கு சென்று, இரும்புகளை ஆக்கிரமிப்பு அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு, தவறு நடந்தது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.


