Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/வேப்பந்தட்டையில் ஆக., 13ல் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்

வேப்பந்தட்டையில் ஆக., 13ல் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்

வேப்பந்தட்டையில் ஆக., 13ல் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்

வேப்பந்தட்டையில் ஆக., 13ல் மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்

ADDED : ஆக 08, 2011 02:37 AM


Google News
பெரம்பலூர்: 'வேப்பந்தட்டை யூனியன் வெங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும் 13ம் தேதி நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொள்ள இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என மாவட்ட கலெக்டர் தரேஸ்அகமது தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: வேப்பந்தட்டை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி வெங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் உடனடியாக வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமிற்கு வந்து செல்ல இலவச பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அன்னமங்கலம், எறையூர், தேவையூர், திருவாளந்துறை, இனாம்அகரம், பாண்டகபாடி, காரியானூர், பில்லாங்குளம், கை.களத்தூர், அயன்பேரையூர், தொண்டபாடி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்களுக்கான பஸ் காலை 7.30 மணிக்கும், மலையாளப்பட்டி, வாலிகண்டாபுரம், பசும்பலூர், பிம்பலூர், நூத்தப்பூர், வி.களத்தூர் ஆகிய பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கான பஸ் காலை 9 மணிக்கும், அரும்பாவூர், தொண்டமாந்துரை, தழுதாழை, வெங்கலம், பிரம்மதேசம், அனுக்கூர், உடும்பியம், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம், வடகரை, வெண்பாவூர், நெய்குப்பை, மேட்டுப்பாளையம், வேப்பந்தட்டை ஆகிய பஞ்சாயத்தை சேர்ந்தவர்களுக்கான பஸ் காலை 10.00 மணிக்கும் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்தடையும். எனவே, சம்மந்தப்பட்ட பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு குறித்த நேரத்திற்கு வந்து இலவச பஸ் வசதியினை பயன்படுத்தி முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us