Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு

அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு

அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு

அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு

ADDED : செப் 30, 2011 01:56 AM


Google News
புதுச்சேரி : தர்மாபுரியில் வீடு வீடாக சென்று அ.தி.மு.க.,வினர் நேற்று ஓட்டு சேகரித்தனர். இந்திரா நகர் தொகுதி தர்மாபுரி வார்டுக்கு உட்பட்ட நாவலர் வீதி, பாவேந்தர் வீதி, கலைவாணர் வீதி, திருவள்ளுவர் வீதி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் நேற்று ஓட்டு சேகரித்தார்.

தர்மாபுரி வார்டில் உள்ள 5 பூத்களுக்கு பொறுப்பாளர் பாஸ்கர் எம்.எல்.ஏ., உடனிருந்தார். மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான கட்சியின் இணை செயலாளர் காசிநாதன், துணை செயலாளர் பன்னீர்செல்வி, மாணவரணி தலைவர் வி.சி.சி. நாகராஜ், உழவர்கரை நகரத் தலைவர் தேவராசு உள்ளிட்டோரும் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர். பிளாஸ்டிக் இரட்டை இலையை வழங்கி அ.தி. மு.க., விற்கு ஓட்டுப் போட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us