Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/""ஓட்டு சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும்'' அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் "அதிரடி' உத்தரவு

""ஓட்டு சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும்'' அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் "அதிரடி' உத்தரவு

""ஓட்டு சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும்'' அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் "அதிரடி' உத்தரவு

""ஓட்டு சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும்'' அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் "அதிரடி' உத்தரவு

ADDED : அக் 08, 2011 01:13 AM


Google News

திருநெல்வேலி : உள்ளாட்சி தேர்தலுக்கு அச்சிடப்பட்ட ஓட்டுச் சீட்டுகளை 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 17ம் தேதி மற்றும் 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.ஓட்டுச் சீட்டுகளை 100 சதவீதம் அதிகாரிகள் சரிபார்ப்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஓட்டு சீட்டுகளை அச்சகத்தில் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்ன அலுவலகத்திற்கு முறையான போலீஸ் பாதுகாப்புடன் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் ஓட்டு சீட்டுகளை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.ஒவ்வொரு மாவட்ட பஞ்., பஞ்.,யூனியன் வார்டுகளுக்கு கூடுதலான ஓட்டு சீட்டுகளை அச்சிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வார்டுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அச்சிடப்பட்ட ஓட்டு சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை காட்டும் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.அச்சிடப்பட்ட ஓட்டு சீட்டுகள் 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக உரிய வரிசை எண்ணுடன் அச்சிடப்பட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் இதனை முழுமையாக 100 சதவீதம் சரி பார்க்க வேண்டும். போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் முறையாக சரியாக அச்சிடப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். ஓட்டு சீட்டில் உள்ள தொடர் எண் அடிச்சீட்டில் உள்ளவற்றுடன் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அச்சகத்தால் அனுப்பபட்ட ஓட்டு சீட்டுகளின் எண்ணிக்கைக்கும் 100 சதவீத சரி பார்ப்பின் போது உள்ள எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருக்க கூடாது.இரட்டிப்பான எண்களுடன் கூடிய ஓட்டு சீட்டுகள் அல்லது விடுபட்ட எண்களுடன் கூடிய ஓட்டு சீட்டுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட பதிவேட்டில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளாட்சி அமைப்புகளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். இதுதொடர்பான தகவலை அனைத்துவேட்பாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.குறைபாடுகளை உடைய ஓட்டுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட அலுவலர நீக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு பின்னரும் ஒட்டுச் சாவடியில குறைபாடு உடைய ஏதாவது ஓட்டு சீட்டு கண்டறியப்பட்டல் அது ஓட்டுச் சாவடி தலைமை அலுவலரால் பயனற்ற, நீக்கம் செய்யப்பட்டது என்பதை குறிபபிட்டு நீக்கம் செய்ய வேண்டும்.தேர்தலுக்கு முன்தினம் மண்டல அலுவலர் மூலமாக ஓட்டுச் சீட்டுகள் மற்றும் இதர பொருட்களை ஓட்டுச் சாவடி தலைமை அலுவலரிடம் ஓட்டுச் சாவடியில் வழங்க வேண்டும். இவைகளை ஓட்டுச் சாவடி தலைமை அலுவலர் சரி பார்த்து கொளள் வேண்டும்.ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் வழங்க வேண்டிய ஓட்டு சீட்டுகளின் எண்ணிக்கை அந்த சாவடியின் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு குறைவாக இருக்க கூடாது. ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும் வழங்குவதற்கு தேவையான ஓட்டு சீட்டுகளின் எண்ணிக்கையை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும். மாவட்ட பஞ்., வார்டுகளுக்கு ஆயிரம் ஓட்டுச் சீட்டுகள் கூடுதலாகவும், பஞ்.,யூனியன் வார்டுகளுக்கு 500 ஓட்டுச் சீட்டுகள் கூடுதலாகவும் அச்சிட வேண்டும். இது குறைபாடு உடைய ஓட்டுச் சீட்டுகள் அல்லது காணாமல் போன ஓட்டுச் சீட்டுகள் அல்லது சில ஓட்டுச் சாவடிகளில் மறு தேர்தலுக்கான தேவை ஆகியவற்றிற்கு பயன்படும்.இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us