/உள்ளூர் செய்திகள்/சேலம்/அசைவ விருந்து நடத்த அனுமதித்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணைஅசைவ விருந்து நடத்த அனுமதித்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை
அசைவ விருந்து நடத்த அனுமதித்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை
அசைவ விருந்து நடத்த அனுமதித்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை
அசைவ விருந்து நடத்த அனுமதித்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூலை 12, 2011 01:30 AM
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சி
நடுநிலைப்பள்ளி வளாகத்தில், விடுமுறை நாளில் அசைவ விருந்து நடத்திக் கொள்ள
தனியாருக்கு அனுமதி வழங்கிய விபரம் குறித்து, பள்ளி தலைமை ஆசிரியையிடம்,
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார்.
ஆத்தூர், காந்தி
நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில், நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், விடுமுறை தினங்களில், அப்பகுதியை சேர்ந்த
முக்கியஸ்தர்களுக்கு, 'உற்சாக' பானத்துடன், தடபுடல் கறி விருந்து
நடத்திக்கொள்ள, பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்து வந்தது. நேற்று முன்தினம்
காலை முதல் மாலை வரை, பள்ளி வகுப்பறைக்குள் தடபுடலான கறி விருந்து நடந்தது.
மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படும் புனிதமான இடத்தில், அசைவ விருந்து
வைத்து அலங்கோலம் செய்து வந்தனர். மேலும், சாப்பிட்ட எச்சில் இலை, குழம்பு,
வேஸ்ட் டம்ளர்கள் போன்றவை வகுப்பறையில் போட்டு அசுத்தம் செய்வதால், படிக்க
வரும் மாணவ, மாணவியர் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலை
ஏற்படுகிறது. தவிர, பள்ளி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டிய தலைமை ஆசிரியர்,
விருந்து நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி, நண்பர்களுடன் வீண் அரட்டை
அடித்துக்கொண்டிருந்தார். இதுகுறித்து, நேற்று, 'காலைக்கதிர்' நாளிதழில்
படத்துடன் விரிவான செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியாக, மாவட்ட
கலெக்டர் மகரபூஷணம் உத்தரவுப்படி, ஆத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
ஆனந்தவேல் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு நேரில் சென்று
விசாரணை நடத்தினர். தொடர்ந்து, விடுமுறை நாளில் கறி விருந்துக்கு அனுமதி
வழங்கியது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை ரஷுதா (எ) ரஷியாபேகத்திடம்,
விசாரணை நடத்தி விளக்கம் பெற்றனர். அதையடுத்து மாவட்ட கலெக்டர், மாவட்ட
கல்வித்துறை அதிகாரிகளுக்கு, சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது
நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளனர்.


