/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.3.04 லட்சம் அபராதம் வசூல்அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.3.04 லட்சம் அபராதம் வசூல்
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.3.04 லட்சம் அபராதம் வசூல்
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.3.04 லட்சம் அபராதம் வசூல்
அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.3.04 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஜூலை 12, 2011 01:31 AM
சேலம்: அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டத்தில், டிக்கெட் இன்றி பயணம் செய்த பயணிகளிடம் இருந்து, 3.04 லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்ட போக்குவரத்து மற்றும் இயக்கம் கூட்டு சார்பில், பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து, 3 லட்சத்து, 4, 498 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சேலம் மண்டலத்தில், 467 பயணிகளிடம் இருந்து, 51 ஆயிரத்து, 636 ரூபாயும், மே மாதத்தில், 625 பயணிகளிடம் இருந்து, 69 ஆயிரத்து, 554 ரூபாயும், ஜூன் மாதத்தில், 1,060 பயணிகளிடம் இருந்து, 92 ஆயிரத்து, 831 ரூபாயும் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மண்டலத்தில் ஏப்ரல் மாதத்தில், 393 பயணிகளிடம் இருந்து, 24 ஆயிரத்து, 732 ரூபாயும், மே மாதத்தில், 438 பயணிகளிடம் இருந்து, 24 ஆயிரத்து, 505 ரூபாயும், ஜூன் மாதத்தில், 492 பயணிகளிடம் இருந்து, 38 ஆயிரத்து, 240 ரூபாயும் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம், தர்மபுரி மண்டலங்களில், மூன்று மாதத்தில், 3 லட்சத்து, 4,498 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்யும் போது, தவறாமல் டிக்கெட் எடுக்க வேண்டும்.


