Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/போலி இந்திய கரன்சிகளை கடத்தியவர் கைது

போலி இந்திய கரன்சிகளை கடத்தியவர் கைது

போலி இந்திய கரன்சிகளை கடத்தியவர் கைது

போலி இந்திய கரன்சிகளை கடத்தியவர் கைது

ADDED : ஜூலை 12, 2011 04:35 AM


Google News

காத்மாண்டு: இந்திய போலி ரூபாய் நோட்டுக்களை கடத்த முயன்றதாக முக்கிய குற்றவாளி உள்பட இருவரை நேபாள் போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவின் போலி கரன்சிகள் வெகுநாட்களாக நேபாள் நாட்டிற்கும் பின் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. ஒரு முறை நேபாள் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா , நேபாளில் போலி இந்திய கரன்சிகள் புழக்கத்தில் இருப்பதை கவலையளிக்கிறது இதனை ஒழிக்க வேண்டும் என்றார். இந்நிலையில் இந்திய- நேபாள் எல்லையில் கலிமாட்டி பகுதியில் இந்திய போலி ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சிறப்பு புலனாய்வு போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது இஃதாப் உசேன் அன்சாரி என்பவனை கைது செய்து அவரிடமிருந்து கட்டுகட்டாக போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றினர். இது குறித்து மத்திய புலனாய்வு படையின் தலைவர் ராஜேந்திரசிங் பண்டாரி கூறுகையில், கைது செய்யப்பட்ட இப்தாப் உசேன் அன்சாரி இந்திய-நேபாள் எல்லையில் உள்ள பாரா மாவட்டத்தின் பிரஸ்டுகா கிராமத்தைச் சேர்ந்தவன. மிகவும் புத்திசாலித்தனமான கிரிமினல் வேலை செய்வதில் கில்லாடி. இவன் தான் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்திய போலி கரன்சிகளை நேபாள் ,பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்தது. முன்னதாக இவனது கூட்டாளியான யூனிஸ் அன்சாரி என்பவன் இதே போலி கரன்சி கடத்தல் சம்பவத்தின் போது கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டான். அவனை விசாரித்ததி்ல் கிடைத்த தகவலின்படி இஃதாப் உசேன் அன்சாரியை கைது செய்தோம்.இவ்வாறு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us