மத்திய வெளியுறவு இணை செயலருக்கு சி.ஐ.சி. அபராதம்
மத்திய வெளியுறவு இணை செயலருக்கு சி.ஐ.சி. அபராதம்
மத்திய வெளியுறவு இணை செயலருக்கு சி.ஐ.சி. அபராதம்
UPDATED : ஜூலை 12, 2011 06:35 AM
ADDED : ஜூலை 12, 2011 06:16 AM
புதுடில்லி: இந்தியாவிற்கு ரஷ்யா வழங்கிய கடனுதவி குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட போது தவறான தகவல் அளித்ததாக எழுந்த புகாரின் பேரில் மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளருக்கு மத்தி்ய தலைமை தகவல் கமிஷன் ரூ.
25 ஆயிரம் அபராதம் விதித்தது. கேரளாவைச் சேர்ந்த , கேரள காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தலைமை தகவல் கமிஷனர் அன்னபூர்ணா தீக்ஷித் என்பவரிடம், இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கிய கடனுதவி மற்றும் பண பரிமாற்றம் குறித்த தகவல்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட கோரி மனு செய்திருந்தார். இது தொடர்பாக தகவல் வெளியிட மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தேபராஜ் பிரதான் என்பவர் சிறிது கால தாமதம் ஏற்படுத்தியதுடன், கமிஷனுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மத்திய தகவல் கமிஷனர் அன்னபூர்ணா, வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.


