/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்களை பாராட்டிய எம்.எம்.ஏ.செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்களை பாராட்டிய எம்.எம்.ஏ.
செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்களை பாராட்டிய எம்.எம்.ஏ.
செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்களை பாராட்டிய எம்.எம்.ஏ.
செந்திலாண்டவர் பாலிடெக்னிக் மாணவர்களை பாராட்டிய எம்.எம்.ஏ.
ADDED : ஜூலை 12, 2011 06:17 AM
தென்காசி : தென்காசி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொண்ட செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களை எம்.எல்.ஏ., சரத்குமார் பாராட்டினார்.தென்காசி அரசு ஆஸ்பத்திரி வளாகம் குப்பைகள் நிறைந்த, புதர்கள் மண்டிய பகுதியாக விளங்கியது.
இது இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனையடுத்து தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்.மாணவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். வளாகத்தில் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தினர்.துப்புரவு பணியில் ஈடுபட்ட மாணவர்களை தென்காசி எம்.எல்.ஏ., சரத்குமார் பாராட்டினார். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரும் மாணவர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியில் ஈடுபட்டார். மேலும் நகராடசி ஊழியர்கள், எக்ஸ்னோரா அமைப்பினர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் எம்.எல்.ஏ., மரக்கன்று நட்டார்.எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இம்மாணவர்களை எம்.எல்.ஏ.,சரத்குமாருடன் சேர்ந்து எக்ஸ்னோரா மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட செயலாளர் சங்கரநாராயணன், நகராட்சி கமிஷனர் செழியன், நகராட்சி சுகாதார துறையினர், மாவட்ட சுகாதார நலப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் ராம்நாத், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் லட்சுமி, உறைவிட டாக்டர் கிருஷ்ணன், கல்லூரி சேர்மன் புதிய பாஸ்கர், முதல்வர் சுந்தரராஜன், துணை முதல்வர் முருகேசன் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லூரி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் சிவராமன், திட்ட உதவியாளர் முருகையா மற்றும் ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர்.


