முதல்வர் இல்லத்தை தாக்குவோம்: தெலுங்கு தேசம் கட்சி ஆவேசம்
முதல்வர் இல்லத்தை தாக்குவோம்: தெலுங்கு தேசம் கட்சி ஆவேசம்
முதல்வர் இல்லத்தை தாக்குவோம்: தெலுங்கு தேசம் கட்சி ஆவேசம்
ADDED : ஜூலை 12, 2011 06:40 AM
ஐதராபாத்: தெலுங்கானா கோரி காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வரும் உஸ்மானிய பல்கலை.
மாணவர்களுக்க ஆதரவாக கலந்து கொள்ள வரும் மற்ற மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினால். முதல்வர் அலுவலக இல்லத்தை தாக்குவோம் என தெலுங்கு தேச கட்சியின் முன்னணி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனித்தெலுங்கான கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சியி்ன் ஒங்கிணைப்பாளர் ஈ. தயாகர் ராவ், கூறுகையில், தெலுங்கான கோரிக்கையை வலியுறுத்தி உஸ்மானிய பல்கலை. மாணவர்களுக்கு ஆதரவாக மேலும் சில மாணவர்கள் ஆதரவாக போராடி வருகின்றனர்.இவர்கள் அவர்களுடன் இணைவதற்காக உஸ்மானியா பல்கலை. நோக்கி சென்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து கரீம் நகர் போலீஸ் ஸ்டேசனின் அடைத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த செயல் நெருக்கடி நிலைமையை போன்று உள்ளது. மேலும் இந்த மாணவர்கள் மீது மீண்டும் போலீசார் தாக்குதல் நடத்தினால் , பதிலுக்கு முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் அலுவலக இல்லத்தை தாக்குவோம்.மேலும் பஸ் யாத்திரை சென்று உஸ்மானியா பல்கலை. மாணவர்களுக்கு ஆதரவாக ஒன்று திரண்டு போராடுவோம். உஸ்மானியா பல்கலை. முன்பு நிறுத்தப்பட்டுள்ள பாரா மிலிட்டரி படையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு தயாகர் ராவ் கூறினார்.


