ADDED : ஜூலை 12, 2011 04:26 PM
லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த சச்சான் மரணம் தற்கொலை அல்ல.
கொலை செய்யப்பட்டுள்ளார் என நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் துணை தலைமை மருத்துவ அதிகாரி சச்சான் நிதிமுறைகேடு காரணமாக கைது செய்யப்பட்ட லக்னோ மாவட்ட சிறை மருத்துவமனை கழிப்பறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவர் தலைமை மருத்துவ அதிகாரி பி பி சிங் கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சச்சான் மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இவரது மரணம் தற்கொலை செய்துள்ளார் என அரசும், போலீசாரும் என தெரிவித்திருந்தனர். பிரேத பரிசோதனையில் இவரது உடலில் 9 காயங்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சச்சான் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. சச்சான் மரணம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தனது விசாரணை அறிக்கையை நேற்று லக்னோ மாவட்ட மாஜீஸ்திரேட், போலீஸ் உயர் அதிகாரியிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை லக்னோ ஐகோர்ட் கிளையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சச்சானின் மரணம் தற்கொலை அல்ல. கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


