ADDED : ஜூலை 12, 2011 06:09 PM
பீஜிங்: பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்ய இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவியில், மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கா சமீபத்தில் நிறுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்ய இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஹாங் லீ கூறுகையில், 'தெற்கு ஆசியாவில் சீனா முக்கியமான நாடு. இம்மண்டலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியைப் பொருத்தது. பாகிஸ்தானுக்கு எப்போதும் சீனா உதவி வருகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவுகிறது. இந்த உதவியை சீனா தொடர்ந்து செய்யும்' என்று தெரிவித்தார்.


