மகாராஷ்டிர முதல்வர் மனைவியிடம் கைப்பை திருட்டு
மகாராஷ்டிர முதல்வர் மனைவியிடம் கைப்பை திருட்டு
மகாராஷ்டிர முதல்வர் மனைவியிடம் கைப்பை திருட்டு
ADDED : ஜூலை 13, 2011 12:15 AM
மும்பை : மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானின் மனைவி வைத்திருந்த பணப்பை மற்றும் மொபைல்போன் போன்றவை, நேற்று திருடு போயின.
சவானின் மனைவி சத்வஷீலா சவான், மகாராஷ்டிராவின் தென்பகுதியில் உள்ள சதாரா மாவட்டத்தின் கராத் என்ற இடத்தில் இருந்து, வடபகுதியில் உள்ள ஜல்காவ் மாவட்டத்தின் ஜல்காவுக்கு, நேற்று 'ஏசி' பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். செல்லும் வழியில், நாசிக் மாவட்டத்தின் மன்மாத் என்ற இடத்தின் அருகில் ரயில் சென்று கொண்டிருந்த போது, அவரது பணப்பை மற்றும் மொபைல்போன் ஆகியவை திருடு போயின. அந்த பையில், 40 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.


