மருத்துவ அதிகாரி சச்சான் மரணம் கொலையே
மருத்துவ அதிகாரி சச்சான் மரணம் கொலையே
மருத்துவ அதிகாரி சச்சான் மரணம் கொலையே
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில், துணை மருத்துவ அதிகாரி சச்சானின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, அலகாபாத் ஐகோர்ட்டில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல மனு ஒன்று, தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஐகோர்ட்டில் சச்சானின் மர்ம மரணம் தொடர்பான, 76 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சச்சானின் கழுத்து, முழங்கைகள், தொடை மற்றும் மணிக்கட்டுகளில் காயங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், 'அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார துறை யில் நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட முன்னாள் தலைமை மருத்துவ அதிகாரி ஏ.கே.சுக்லா நேற்று கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத் தில்தான் சச்சான் கைது செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


