/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழாகரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி 7வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 13, 2011 02:27 AM
கரூர்: கரூர் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ஏழாவது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி இயக்குனர் டாக்டர் குப்புசாமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் வேலவன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி தலைவர் குமாரசாமி தலைமை வகித்து பேசினார். சென்னை டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் மண்டல தலைவர் ராம்குமார், 340 முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: உலகில் மிகப்பெரிய நாடாக கருதப்படும் அமெரிக்காவில் இன்றும் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், இந்தியாவில் அந்த நிலையில்லை. இங்கு படித்தவர்களும் அதிகம். அதே போல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகம். வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் குறைவு. பட்டங்களை பெற்று வாழ்வில் ஒரு படியை கண்டுள்ள நீங்கள், கற்றக்கல்வியை கொண்டு சரியான பணியை தேர்ந்தெடுத்து அந்த பணியில் ஆர்வமுடன் செயல்படுங்கள். தொடர்ந்து உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், எம்.இ., மாணவர்கள் 22 பேர், எம்.பி.ஏ., மாணவர்கள் 177 பேர், எம்.சி.ஏ., மாணவர்கள் 141 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலை அளவில் எம்.சி.ஏ.,வில் 40 பேரும், எம்.பி.ஏ.,வில் 20 பேரும் ரேங்க் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் விமலா ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் டாக்டர் வளவன், துணைமுதல்வர் சித்ரா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.


