/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
நகராட்சி வார்டு எண்ணிக்கை குறைப்பு? : புதுகையில் தி.மு.க.,- காங்., ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை குறைக்க நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டித்து தி.மு.க., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்களை பழிவாங்குவதற்காகத் தான் இத்தகைய நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக நகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றஞ்சாட்டி அண்மையில் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி வசம் உள்ள வார்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை கண்டித்தும், இதை கைவிடக்கோரியும் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு தி.மு.க., மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமை வகித்தார். அவைத்தலைவர் சந்திரசேகரன், துணைச் செயலாளர்கள் கவிதைப்பித்தன், மதியழகன், ராஜேஸ்வரி, நகரச் செயலாளர் வீரமணி, நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகம்மது, காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் ஆறுமுகம், ஆனந்தன் உட்பட தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


