Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/விநாயகா வித்யாலயா மாணவர்கள் சாதனை

விநாயகா வித்யாலயா மாணவர்கள் சாதனை

விநாயகா வித்யாலயா மாணவர்கள் சாதனை

விநாயகா வித்யாலயா மாணவர்கள் சாதனை

ADDED : ஜூலை 13, 2011 03:29 AM


Google News

சேலம்: இன்விடேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், சேலம், விநாயகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.அகில உலக இன்விடேஷனல் கராத்தே கோல்டு மெடல் சாம்பியன்ஷிப் போட்டி, சேலம், காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்தியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஈரான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.சேலம் ஃபேர்லாண்ட்ஸ் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில், 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சண்டை மற்றும் கட்டா, டீம்கட்டா பிரிவு போட்டிகளில் பங்கேற்றனர். எட்டாம் வகுப்பு மாணவி பிரியங்கா (பிளாக்பெல்ட்) மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.ஆறாம் வகுப்பு மாணவி ராஜரஜேஸ்வரி, நான்கு போட்டியில் பங்கேற்று, ஒரு தங்கப்பதக்கம் மற்றும் அரைகிராம் தங்க காசு, மூன்று வெள்ளி பதக்கம் மற்றும் 10 கிராம் வெள்ளிக்காசு பெற்றார். மாணவன் சூர்யபிரகாஷ், ஒரு போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் கீதா, பள்ளி உடற் கல்வி பயிற்சியாளர் கார்த்திகேயன், சேலம் மாவட்ட தலைமை மாஸ்டர் ரியோசின்கான், சீனிவாசன் ஆகியோர் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us