/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முத்தாயம்மாள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ 12 பேருக்கு உத்தரவுமுத்தாயம்மாள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ 12 பேருக்கு உத்தரவு
முத்தாயம்மாள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ 12 பேருக்கு உத்தரவு
முத்தாயம்மாள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ 12 பேருக்கு உத்தரவு
முத்தாயம்மாள் கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ 12 பேருக்கு உத்தரவு
ADDED : ஜூலை 13, 2011 03:33 AM
ராசிபுரம்: முத்தாயம்மாள கலை அறிவியல் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில், 12 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சேலம் கண்ட்ரி வெக்கேசன் நிறுவனம் சார்பில், கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.
நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, மூன்று கட்டமாக தேர்வுகளை நடத்தினர். இறுதி சுற்றில், 12 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.பி.காம்., (சி.ஏ.,) மாணவ, மாணவியர் சங்கீதா, யாஸ்மீன், மாலதி, கவிதா, சக்தி, ராஜஜோதி, சரோஜினி, சுகுமார், பி.பி.ஏ., மாணவர்கள் பிரகாஷ், தனபாலன், பி.காம்., மாணவர்கள் சுகவனேஸ்வரன், நவின்குமார் ராவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்லூரி தாளாளர் ராமசுவாமி, செயலாளர் முத்துவேல், முதல்வர் செல்வக்குமரன், டீன் ஸ்டெல்லாபேபி, வேலைவாய்ப்பு அலுவலர் லுக்மான் சித்திக் ஆகியோர் பாராட்டினர்.


