ADDED : ஜூலை 13, 2011 04:43 PM
சென்னை: தமிழகத்தில் 15 மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., டி.கே. புகழேந்தி, சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். போதை தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., கண்ணப்பன், அரியலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் எஸ்.பி., பன்னீர் செல்வம், சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தலைமையக உதவி ஐ.ஜி., பாபு, வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாகவும், அமலாக்கப்பிரிவு எஸ்.பி., சாந்தி கொள்ளை தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


