ADDED : ஜூலை 13, 2011 10:09 PM
திருவாடானை : மணல் குவாரியில் கூடுதல் தொகை வசூலிப்பதால் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
திருவாடானை அருகே ஓரியூர் ஆற்றில் மணல் குவாரியில் ஒரு யூனிட் டிராக்டருக்கு ரூ.600ம், லாரிக்கு ரூ.ஆயிரத்து 200ம் வசூல் செய்யபட்டது. நேற்று டிராக்டருக்கு ரூ.750ம், லாரிக்கு ரூ.ஆயிரத்து 500ம் வசூலித்ததால், லாரி டிரைவர்கள் 'மணல் அள்ளமுடியாது' என ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். தாசில்தார் தர்மராஜன் லாரி டிரைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, 'டிராக்டருக்கு ரூ.700ம், லாரிக்கு ரூ.ஆயிரத்து 400ம் வசூல் செய்வது' என பேசி முடிவு செய்த பின் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.


