/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பரில் முடியும்மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பரில் முடியும்
மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பரில் முடியும்
மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பரில் முடியும்
மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பரில் முடியும்
மானாமதுரை : ''மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணி டிசம்பருக்குள் முடியும்,'' என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிர்ஷண் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மானாமதுரை - விருதுநகர் அகல ரயில்பாதை பணிகள், டிசம்பருக்குள் முடிக்கப்படும். இதன் வழியாக சரக்கு ரயில்களை இயக்கவும் முடிவு செய்துள்ளோம். மதுரை - ராமேஸ்வரம் இடையே செல்லும் ரயில்களில் 40 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளே பயணிக்கின்றனர். இந்த வழியாக கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும். மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஸ்டேஷனில் 'டச் ஸ்கிரீன்' வசதி தேவையில்லை,'' என்றார். கோட்டமேலாளர் ஏ.கே.கோயல், துணை மேலாளர் வேங்கட சுப்பிரமணியன், முதுநிலை மேலாளர்கள் (இயக்கம்) ரகுராமன், (வணிகம்) ஹோசியார்சந்த், ஸ்டேஷன் மாஸ்டர் ராஜேந்திர பாண்டியன் பங்கேற்றனர்.


