/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆடு, மாடு பெறும் பயனாளிகளை கிராமசபையில் தேர்வு செய்ய உத்தரவுஆடு, மாடு பெறும் பயனாளிகளை கிராமசபையில் தேர்வு செய்ய உத்தரவு
ஆடு, மாடு பெறும் பயனாளிகளை கிராமசபையில் தேர்வு செய்ய உத்தரவு
ஆடு, மாடு பெறும் பயனாளிகளை கிராமசபையில் தேர்வு செய்ய உத்தரவு
ஆடு, மாடு பெறும் பயனாளிகளை கிராமசபையில் தேர்வு செய்ய உத்தரவு
ADDED : ஜூலை 13, 2011 10:11 PM
சிவகங்கை : இலவச ஆடு, மாடு பெறும் பயனாளிகள் பட்டியலை ஆக., 15ல் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெ., தமிழகத்தில் 5 ஆண்டிற்குள் 60 ஆயிரம் கறவை மாடுகள், 7 லட்சம் ஆடுகள் வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் செப்.,15 முதல் துவங்கும். இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது.
விதிகள்: பயனாளிகளை ஆக., 15ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வைத்து தேர்வு செய்யவேண்டும். விதவை, ஆதரவற்ற அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களை மட்டுமே தேர்வு செய்யவேண்டும். அவருக்கு வயது 60க்குள் இருக்கவேண்டும். குடும்பத்தில் யாரும் சம்பளம் பெறுபவராக இருத்தல் கூடாது. ஒரு ஏக்கர் வரை நிலம் இருக்கவேண்டும். கறவை மாடு அல்லது ஆடு ஏதேனும் ஒன்று தான் வழங்கப்படும். இதற்கான பயனாளிகளை ஆக.,15 அன்று நடக்கும் கிராமசபை கூட்டத்தில் தேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியலை கிராம ஊராட்சிகளில் ஒட்டவேண்டும். பட்டியல் தயாரிக்கும் பணியை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்'' என, அரசு உத்தரவிட்டுள்ளது.


