/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வறட்சி காலத்தில் விளைச்சல் தரும் உளுந்து பயிர் சாகுபடிவறட்சி காலத்தில் விளைச்சல் தரும் உளுந்து பயிர் சாகுபடி
வறட்சி காலத்தில் விளைச்சல் தரும் உளுந்து பயிர் சாகுபடி
வறட்சி காலத்தில் விளைச்சல் தரும் உளுந்து பயிர் சாகுபடி
வறட்சி காலத்தில் விளைச்சல் தரும் உளுந்து பயிர் சாகுபடி
ADDED : ஜூலை 13, 2011 10:12 PM
காரைக்குடி : வறட்சியை தாங்கி விளையக்கூடிய உளுந்து(வம்பன் 5 ரக) பயிர் சாகுபடி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்வதாக,'' செட்டிநாடு மானாவாரி செம்மண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பி.
பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,''வறட்சியை தாங்கிநிற்கும் பயிர் ரகங்கள் கண்டறியும் ஆராய்ச்சி பணி நடக்கிறது. ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் இருந்து விதைகள் வாங்கி பரிசோதிக்கிறோம். கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 'கோ- 29 ரக' தீவன சோளம் நட்டுள்ளோம். 'பயிர் ஒண்டல்' என்ற நுண்ணூட்ட கலவையை கண்டுபிடித்துள்ளோம். இது பூ உதிராமல் தடுத்து, அதிக காய்கள் வளரும். பூச்சி, நோய் தடுப்பு முறைகள் குறித்து ஆய்வு நடக்கிறது. நிலத்தின் வளத்தை மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. பண்ணை கழிவை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கப்படும். இதற்கான பயிற்சி ஜூலை 20ல் துவங்குகிறது,'' என்றார்.


