/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி தாலுகாவை பிரிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்பொள்ளாச்சி தாலுகாவை பிரிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி தாலுகாவை பிரிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி தாலுகாவை பிரிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
பொள்ளாச்சி தாலுகாவை பிரிக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 13, 2011 10:15 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவை வடக்கு, தெற்கு என்று பிரித்து
பொள்ளாச்சியிலேயே அமைக்க வேண்டும் என்று தி.மு.க., - ம.தி.மு.க., - காங்.,
கட்சியினர் டி.ஆர்.ஓ.,விடம் வலியுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்த
ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆர்.ஓ., கற்பகத்திடம் தி.மு.க., -
ம.தி.மு.க., - காங்,, கட்சியினர் தாலுகா பிரிப்பது தொடர்பாக கோரிக்கை மனு
கொடுத்துள்ளனர். ம.தி.மு.க., சார்பில் கொடுத்த மனுவில், கிணத்துக்கடவு
தாலுகா உருவாக்கி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளை அதில் சேர்த்தால்
பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பொள்ளாச்சி வடக்கு, ராமபட்டிணம்,
நெகமம் உள்வட்டத்தில் இருக்கும் பொதுமக்கள் தாசில்தாரை சந்திக்க
கிணத்துக்கடவுக்கு இரண்டு பஸ் மாறி செல்ல வேண்டும். அதனால் பொள்ளாச்சி
வடக்கு, தெற்கு என்று தாலுகாவை பிரித்து பொள்ளாச்சியிலேயே தலைமையிடம்
அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., - காங்., மற்றும் வடக்கு ஒன்றிய ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய
உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள் சார்பில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சி
நகரம், வடக்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்கள், கிணத்துக்கடவு, நெகமம்
பேரூராட்சிகளை சேர்த்து வடக்கு தாலுகா உருவாக்க வேண்டும். பொள்ளாச்சி
தெற்கு, ஆனைமலை ஒன்றியம், கோட்டூர், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி,
வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம், ஆனைமலை, ஜமீன்ஊத்துக்குளி ஆகிய பேரூராட்சி
பகுதிகளை சேர்த்து பொள்ளாச்சி தெற்கு தாலுகா உருவாக்க
வேண்டும்.பொள்ளாச்சியில் அனைத்து துறை அரசு அலுவலகங்களும் உள்ளது. அதனால்,
இரு தாலுகாவுக்கும் பொள்ளாச்சியிலேயே தலைமையிடம் அமைத்தால் மக்களுக்கு
போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும்.இவ்வாறு, மனுவில்
தெரிவித்துள்ளனர்.மனுக்களை பெற்ற டி.ஆர்.ஓ., கற்பகம், 'இந்த கோரிக்கைகள்
மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். மக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை
எடுக்கப்படும்' என, கட்சியினருக்கு பதிலளித்தார்.


