/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுரைநலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை
நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை
நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை
நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுரை
ADDED : ஜூலை 13, 2011 10:19 PM
வால்பாறை : ''அரசு நலத்திட்டங்களை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்,'' என்று மனுநீதி நாள் முகாமில் மாவட்ட கலெக்டர் கருணாகரன் கூறினார். வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்(மனுநீதிநாள்) நடந்தது. பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர் கருணாகரன் பேசியதாவது: முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களை அதிகாரிகள் நேரடியாக சென்று தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார். பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், வால்பாறை எம். எல்.ஏ., ஆறுமுகம், அ.தி. மு.க., சட்டŒபை தொகுதி செயலாளர் அமீது, நகர செயலாளர் மயில்கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரவேலு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் மனு கொடுத்த மக்கள்: விழா துவங்கியது முதல் இறுதி வரை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் நின்று கொண்@ட இருந்தனர். அரசு விழா என்றாலும் அரசியல் பிரமுகர்களுக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டது. குறுலான இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் மனு பெறும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, புகைப்படம் எடுக்க சென்ற பத்திரிக்கையாளர்களை மக்கள் கிழே தள்ளிவிட்டனர்.அது வரை வேடிக்கை பார்த்த போலீசார் கடைசி நேரத்தில் வந்து கூட்டத்தை சரிசெய்தனர். குறுகலான இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டதால் மக்கள் கொட்டும் மழையில் பல மணி நேரம் நனைந்தபடி காத்திருந்து மனுக்களை கொடுத்தனர்.


