/உள்ளூர் செய்திகள்/சென்னை/பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் வழங்கப்பட்ட, 600 திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 432 பேர் வசிக்கின்றனர்.
இது குறித்து, நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற, 5, 000 ரூபாய் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். மாதம், 50.50 ரூபாய் குடிநீர் வரி செலுத்த வேண்டும். முறையற்ற இணைப்புகள் தற்போது துண்டிக்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும். இந்த இணைப்புகளை முறைப்படுத்த, சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு இதுவரை முறையற்ற நிலையில் குடிநீர் பெற்று வந்ததற்கு, 5, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மொத்தம், 10ஆயிரம் ரூபாய் செலுத்தினால், குடிநீர் இணைப்பு முறைப்படுத்தப்படும்.இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.


