/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நள்ளிரவில் நகை வியாபாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகை பறிப்புநள்ளிரவில் நகை வியாபாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு
நள்ளிரவில் நகை வியாபாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு
நள்ளிரவில் நகை வியாபாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு
நள்ளிரவில் நகை வியாபாரிகளை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி 10 சவரன் நகை பறிப்பு
ADDED : ஜூலை 13, 2011 11:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த நகைக்கடைகாரர்களை, காரில் வந்து வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 10 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் எண்ணெய்காரத் தெருவைச் சேர்ந்தவர் கேசாராம்.
இவரது மகன் லஷ்மணன், 25. பணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டீகாராம். இவரது மகன்நேமாராம், 26. இருவரும், நகைக்கடை வியாபாரிகள்.நேற்று முன்தினம், இருவரும், மோட்டார் சைக்கிளில் சென்னைக்குச் சென்றனர். பின், இரவு, காஞ்சிபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு, காஞ்சிபுரம் அருகே, ராஜகுளம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பஞ்சாபி தாபா ஓட்டலில், இருவரும் சாப்பிட்டனர். பின், மீண்டும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். சர்வீஸ் சாலையில் வந்த போது, அங்கு தயாராக இருந்த பொலீரோ கார், மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியது. காரிலிருந்த இரண்டு பேர் அவசரமாக இறங்கி கத்தியை காட்டி மிரட்டி, லஷ்மணன் அணிந்திருந்த ஐந்து சவரன் பிரேஸ் லெட் மற்றும் ஐந்து சவரன் செயின் ஆகியவற்றை பறித்தனர்.அவர்களை தடுக்க முயன்ற லஷ்மணனை தாக்கி விட்டு, நகைகளுடன் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதில், இடதுகையில் காயமடைந்த அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, லஷ்மணன் கொடுத்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.


