Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/விஷம் கொடுத்து குழந்தை கொலை தந்தை தற்கொலை முயற்சி

விஷம் கொடுத்து குழந்தை கொலை தந்தை தற்கொலை முயற்சி

விஷம் கொடுத்து குழந்தை கொலை தந்தை தற்கொலை முயற்சி

விஷம் கொடுத்து குழந்தை கொலை தந்தை தற்கொலை முயற்சி

ADDED : ஜூலை 13, 2011 11:15 PM


Google News

பள்ளிப்பட்டு: குடும்பத் தகராறு காரணமாக தந்தை, இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இச் சம்பவத்தில் 8 வயது மகன் இறந்தார். மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, வி.கே.ஆர்.புரத்தைச் சேர்ந்தவர் காளன் மகன் சிவன், 35. கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுபாஷினி, 28. இவர்களுக்கு கஜேந்திரன், 8, பாஸ்கரன், 4, என்ற இரண்டு மகன்கள்.சிவன் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர். இதை மனைவி கண்டித்தும், கணவர் கண்டு கொள்ளாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.



இதனால் கணவர், மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன், மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.அவரை அழைத்து வர இரு தினங்களுக்கு முன் கணவர் அங்கு சென்றார். ஆனால், அவருடன் வர மனைவி மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த கணவர் பூச்சி மருந்து வாங்கிச் சென்று, தனது இரண்டு மகன்கள் வாயில் ஊற்றி விட்டு, தானும் குடித்து விட்டார்.இதையறிந்த அக்கம்பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆபத்தான நிலையில் இரு ந்த மூவரையும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் கஜேந்திரன் இறந்தார். கஜேந்திரன், அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us