தே.மு.தி.க பிரமுகர் மீது தாக்குதல்
தே.மு.தி.க பிரமுகர் மீது தாக்குதல்
தே.மு.தி.க பிரமுகர் மீது தாக்குதல்
ADDED : ஜூலை 13, 2011 11:45 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே தே.மு.தி.க பிரமுகரைத் தாக்கிய பா.ம.க வினர் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலியைச் சேர்ந்தவர் மோகனசந்தரம்.
இவர் பா.ம.க.,வில் இருந்து விலகி தே.மு. தி.க.,வில் இணைந்தார். இந்நிலையில் பா.ம.க.,வைச் சேர்ந்த சரவணன், கோதண்டராமன் உட்பட 10 பேர் சேர்ந்து பில்லாலியில் உள்ள தே.மு.தி.க கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தினர். இதையறிந்த தே.மு.தி.க.,வைச் சேர்ந்த மோகனசந்தரம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த பா.ம.க.,வினர் மோகனசந்தரத்தைத் தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து பா.ம.க.,வைச் சேர்ந்த சரவணன், கோதண்டராமனை கைது செய்து மேலும், எட்டு பேரை தேடிவருகின்றனர்.


