/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை: மாணவர்கள், பொதுமக்கள் அவதிகுறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
குறிப்பிட்ட நேரத்தில் பஸ் இல்லை: மாணவர்கள், பொதுமக்கள் அவதி
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.விருத்தாசலத்தில் இருந்து ஆலடி, பாலக்கொல்லை வழியாக உளுந்தூர்பேட்டை வரை பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
இதனால் இந்த கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்பவர்கள், பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பணிக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக ஆலடியில் இருந்து விருத்தாசலம் நோக்கி காலை 7.30 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும், 7.45 மணிக்கு ஒரு அரசு பஸ்சும் செல்கிறது. இந்த அரசு பஸ்சில் பெரும்பாலும் பள்ளி மாணவர்களை மட்டுமே ஏற்றுவதால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதில் செல்ல முடிவதில்லை.தொடர்ந்து 8.30 மணிக்கு வரும் தனியார் பஸ்சில் அனைவரும் செல்லும் நிலை உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல வேண்டும் என்பதால் இதே பஸ்சில் செல்ல முயற்சிக்கின்றனர்.
இதனால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிவதோடு, படிக்கட்டுகள், மேல்கூரைகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். இந்த கூட்ட நெரிசலில் பஸ்சில் ஏற முடியாதவர்கள் காத்திருந்து அடுத்ததாக 9.15 மணிக்கு வரும் அரசு பஸ்சில் சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடிவதில்லை.அதனால் அந்த வழியாக செல்லும் பிற வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு கூடுதலாக ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும்.


