/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கம்
ADDED : ஜூலை 14, 2011 12:04 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் யூனியனில் உள்ள வடக்குமாதவி கிராமத்தில்,
தே.மு.தி.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு
கட்சியின் ஒன்றிய செயலாளர் வாசுரவி தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள்
சுரேஷ், கலைச்செல்வன், செல்வக்குமார், சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை காமராஜ், கட்சி கொடியை
ஏற்றிவைத்து உறுப்பினர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கி உறுப்பினர்
சேர்க்கை முகாமை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்
கண்ணுசாமி, வக்கீல் அணி செயலாளர் சேதுபதி, கிளை நிர்வாகிகள் ஆனந்த்,
மனோஜ்குமார், அரவிந்தன், கலைமணி, துர்க்கைபாண்டி, செந்தில் உட்பட பலர்
பங்கேற்றனர்.


