ADDED : ஜூலை 14, 2011 12:05 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கோர்ட் முன் நேற்று காலை நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் சங்க தலைவர்கள் ராஜாராம், துளசிங்கம், செயலாளர்கள் தங்கராஜி, சங்கரன், ராஜாராம் முன்னிலை வகித்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே தனது ராணுவத்தால் தமிழர்களை படு கொலை செய்வதைக் கண்டித்தும், சர்வதேச நீதிமன்றத்தின் முன் ராஜ பக்ஷேவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு அமைத்திட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல்கள் கல்பட்டு ராஜா, மன்னப்பன், ஜெயபிரகாஷ், நடராஜன், ராஜேஷ், சிங்கார வேலு, ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


