ADDED : ஜூலை 14, 2011 12:07 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஒன்றிய தே.மு.தி.க., செயல்
வீரர்கள் கூட்டம் மணக்குடியில் நாகை மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில்
நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராமராமி வரவேற்றார். மாவட்ட பொருளாளர் அணிஸ்
பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பிரின்ஸ் கோபால்ராஜா, செயற்குழு
உறுப்பினர் அகமது ரபீக், மகளிரணி துணை செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை
வகித்தானர். ஒன்றியத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை
சிறப்பாக கொண்டாடுதல், கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல்,
ஒன்றியத்தில் பெருபான்மை இடங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுதல்
உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


