முகையூர் தி.மு.க., கொடியேற்று விழா
முகையூர் தி.மு.க., கொடியேற்று விழா
முகையூர் தி.மு.க., கொடியேற்று விழா
ADDED : ஜூலை 14, 2011 12:09 AM
திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
முகையூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் முகையூர் சந்தைமேட்டில் கட்சிக் கொடியேற்றி அன்னதானம் வழங்கப் பட்டது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் தங்கம் முன்னிலை வகித்தார். ஆதிசங்கர் எம்.பி., தலைமை தாங்கி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கினார். கிளைக்கழக செயலாளர் லூயிஸ், சிவமூர்த்தி, சேகர், லெனின்தாஸ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


