/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூலை 14, 2011 12:11 AM
திண்டிவனம் : திண்டிவனம் பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி.,குப்புசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அறிவானந்தன், ரவீந்தர்ராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கீதா, மூர்த்தி, நகைக் கடை உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் , கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.எஸ்.பி., குப்புசாமி பேசியதாவது: கடைகளில் கூடுதல் பூட்டுகளை உபயோகிக்க வேண்டும். வாட்ச் மேன், அலாரம், கூர்க்காக்கள், ரோந்து போலீசுக்கான பட்டா புத்தகம், கண்காணிப்பு கேமரா, மின் விளக்குகளை எரிய விட வேண்டும். சந்தேக நபர்கள் பற்றிய தகவல், திருட்டு நகைகள் விற்க வந்தால் ரகசிய தகவல் தெரிவிக்க வேண்டும். டி.எஸ்.பி., அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை அளிக்க வேண்டும். கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் குற்றங்களை தடுக்கமுடியும். இவ்வாறு டி.எஸ்.பி., குப்புசாமி பேசினார்.


